நடிகர் சூரி காமெடியனாக நடிக்கத் துவங்கி இப்போது தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து வருகின்றார்.
விடுதலை படத்தின் மூலம் நடிப்பில் அசத்திய சூரி நடிப்பில் கடந்த மே 16 ஆம் திகதி வெளியான படம் மாமன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
தாய் மாமன் உறவைப் பற்றி அழுத்தமாக காட்டப்பட்டுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
மக்களை எமோஷ்னல் கதைக்களத்துடன் கட்டுப்போட்டுள்ள மாமன் திரைப்படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படமானது 5 நாள் முடிவில் மொத்தமாக 17 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.