ரஷ்யா – உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் இராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷ்யாவுக்கு, வடகொரியா இராணுவ தளபாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகின்றது.
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.
இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகின்றார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில்,”ரஷ்யா போர் நிறுத்தம் மட்டுமின்றி அவர்கள் வேறு சில கொள்கைகளையும் விரும்புகிறார்கள்.. போர் நிறுத்தத்திற்கு ஒவ்வொருவரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.