திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தொழிற் சந்தை ஒன்று இம் மாதம் (28.05.2025) பிரதேச செயலக மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை இடம் பெறவுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தொழிற் சந்தையானது மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களமும், தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதில் தனியார் நிறுவனங்களை சேர்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன. அன்றைய தினம் கல்வித் தகைமை, தங்களது தொழில்சார் சான்றிதழ்களுடன் வருகை தந்து வேலை வாய்ப்புக்களை பெறுவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT