• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ; சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு..!

Thamil by Thamil
May 20, 2025
in இலங்கை செய்திகள்.
0
நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ; சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு..!
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்ப சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அரச தரப்பினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை சபை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27/2 கீழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி, மேலும் சில கேள்விகளை எழுப்பியதுடன் சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ஆளும் தரப்பு எம்.பி. கெளஷல்யா ஆரியரத்ன, “தயாசிறி எம்.பி. எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினை நிலையியற் கட்டளைக்கு முரணானது. சபையை அவர் தவறாக வழிநடத்தி இருக்கின்றார்” என்று தெரிவித்தார்.

இதன்போது தயாசிறி எம்.பி. அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தயாசிறி எம்.பி., கெளஷல்யா எம்.பியைப் பார்த்து ஏதோ தெரிவித்தார். அதன்போது அவரின் ஒலிவாங்கி முடக்கப்பட்டிருந்தது.

இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி நிதியத்தின் கொள்ளையடித்தவர், ஏழைகளின் பணத்தைச் சூறையாடியவர் என்றவாறாக கடும் ஆவேசமாகத் தயாசிறி எம்.பியைப் பார்த்துத் தெரிவித்தார்.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருடன் இன்னும் சில அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்தனர். அரச தரப்பினர் தமது கருத்துக்களை ஒழுங்குப் பிரச்சினை என்ற அடிப்படையில் முன்வைக்க அனுமதித்த சபாநாயகர் எதிர்க்கட்சியினருக்கு நேரம் வழங்க மறுத்து விட்டார். இதனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி . சிவஞானம் சிறீதரனுக்கு விசேட கூற்று முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவர் உரையாற்ற முடியாதளவுக்கு சபை அமளிதுமளி பட்டுக்கொண்டிருந்தது. சிறீதரன் எம்.பி. தனது கருத்துக்களை முன்வைக்கப் பல தடவைகள் முயன்ற போதும் அது முடியவில்லை.

இந்நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி, “நான் 20 செக்கன்கள் இடையில் உரையாற்றிய போது என்னைச் சபையில் இருந்து வெளியில் அனுப்பினீர்கள். ஆனால், தற்போது இவ்வளவு பேர் கூச்சலிட்டுக் கொண்டிக்கும்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே?” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இவ்வாறாக சபை நடவடிக்கைகள் சுமார் 20 நிமிடங்கள் வரை கடும் அமளி துமளிக்கு மத்தியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இறுதியில் அனைவரும் அமைதியாகினர்.

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி