பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு முல்லேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கார் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் ஹரக் கட்டா உள்ளிட்ட இருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் இன்று(20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஹரக் கட்டாவுக்கு எதிராக முன்னிலையான மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா பிரதி இன்று விடுமுறையில் உள்ளதால், விசாரணைக்கு வேறு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.