ஆப்கானிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கான் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம். இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நதிகளின் நீரைத் தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டத் தயாராகி வருகின்றது.
தாலிபான் அரசின் இராணுவ ஜெனரல் முகமது முபின் கான், குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்த பின்னர், புதிய அணைகள் கட்டுவதற்கான நிதியை திரட்ட ஆப்கான் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.