சிவபூமியாம் திருமூலரால் போற்றப்பட்ட இலங்கா புரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மா, பலா, வேம்பு சூழ எழில் கொஞ்சம் அழகு செறி பிரதேசமாம் திருக்கோவில் பிரதேசத்தில் பொன்விளையும் வயல் வெளிகளும் வாவி மகள் சூழ் கள்ளியன் தீவு பதி அமர்ந்து தனிகோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகியாம் அருள் மிக சகலகலை அம்மனுக்கு வருடாந்த வருஷாபிஷேக 1008 சங்காபிஷேக நிகழ்வு பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கான பாற்குடப்பவனியானது மாணிக்கங்கை அருகில் வீற்றிருந்து அருபாலிக்கும் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.
மேலும் குறித்த சங்காபிஷேக நிகழ்வானது பிரதம குரு.கிறியா திலக தற்புகமணி சாதக சிரோண்மணி சாதக ஞானபாஸ்கரன் ஈசான சிவாச்சாரியார் சீதாராம கோவர்த்தன குருக்கள் அவர்களின் தலைமையில் குருமார்களின் உதவியுடன் இடம்பெற்றது.
மேலும் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் திரு.கமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பல பக்த அடியவர்களும் கலந்து கொண்டது குறிப்பித்தக்கது.


