வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் நிதியுதவியுடன் மாலைதீவில் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம்(18) இந்தியா-மாலைதீவுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.
மாலைதீவில் படகு சேவையை மேம்படுத்துதல், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாலைதீவு அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா கலீல், இந்தியா சார்பில் மாலைதீவுக்கான இந்திய தூதர் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் முகமது அமீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.