வவுனியா மூன்றுமுறிப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி இரவு வவுனியா மூன்றுமுறிப்புப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
உயிரிழந்த பெண் இதுவரை பொலிஸாரால் அடையாளம் காணப்படவில்லை. எனவே அவரது உறவினர்கள் யாரேனும் இருந்தால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டு நிற்கின்றனர்.
