• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அமைதியை நிலைநாட்டலே மிக உயர்ந்த நீதி; இங்கு மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்.!

Mathavi by Mathavi
May 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அமைதியை நிலைநாட்டலே மிக உயர்ந்த நீதி; இங்கு மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்.!
Share on FacebookShare on Twitter

“பெற்றோர்களே, நீங்கள் இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகளைத் தியாகம் செய்தீர்கள். நீங்கள் சிறந்த தந்தையர் – தாய்மார். மனைவிமாரே உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால், அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவிடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தினத்தை நினைவுகூரும் நிகழ்வு நேற்று பிற்பகல் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக, முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு:-

“எமது நாடு பல தசாப்தங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. யுத்தம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவைத் தந்தது. பலவருடங்களின் பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது. யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூருகின்றோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே, கிறிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர்.

யுத்தத்தை நிறைவு செய்ய எமது படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர், குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர். அவர்களை நாம் தினமும் நினைவில்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன்பட்டுள்ளது.

யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தைத் தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. அனைவரும் சமாதானத்தை எதிர்பார்த்தே போராடினர். வடக்கு – தெற்கு பேதமின்றி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், கணவரை இழந்த மனைவிமார் உள்ளனர். அவர்கள் கௌரவத்துடன் நினைவுத் தூபியில் தமது உறவினர்களின் பெயர்களைத் தேடுகின்றனர். இங்கு மாத்திரமா வடக்கிலும் இதே நிலைமைதான். தமது பிள்ளைகள், கணவர்மார்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரம் ஒப்பாரி வைக்கின்றனர்.

அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளை முக்கியம். பாரிய அழிவை சந்தித்த தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும். எமது சந்ததி சண்டையிட்டது. கோபமும் குரோதமும் பரவியது. ஆனால், எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத, மோதல் அற்ற, சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. யுத்தமற்ற, குரோதமோ, சந்தேகமோ அற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் மோதல், குரோதம் உள்ள நாட்டுக்குப் பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

நாம் எதிர்கால சந்ததியினருக்குச் சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும். அதிகாரத்தைப் பெறவும் பாதுகாக்கவும் யுத்தம், மோதல் மற்றும் இனவாதத்தைக் கடந்த காலத்தில் பயன்படுத்தினார்கள். சரத் பொன்சேகா இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் என்ன தவறு செய்தார்? அவருடன் நான் அன்று நெருக்கமாகப் பழகினேன்.

அதிகாரத்தைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் மோதல்களினால் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பிள்ளைகளே பாதிக்கப்பட்டனர். யுத்தத்திற்கு எந்தக் காரணமும் அற்ற பங்களிக்காத கிராமத்துப் பெற்றோரின் பிள்ளைகளே இறந்தனர். அங்கவீனமுற்றனர். இதுதான் அதனால் கிடைத்த அழிவாகும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டோருக்கு யுத்தம் என்பது இனிய அனுபவம். நாம் சமாதானத்திற்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால், இன்று சமாதானம் என்பது காட்டிக்கொடுப்பின் சின்னமாக மாறியுள்ளது. நல்லிணக்கம் என்பது காட்டிக்கொடுப்பாக உள்ளது. யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்ல. படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக வேண்டும்.

நாம் மனிதாபிமானத்திற்கும், மனிதத்துவத்திற்குமே அடிபணிய வேண்டும். இந்த பூமி போதுமான அளவு இரத்தத்தில் தோய்ந்துள்ளது. பெற்றோரும் உறவினர்களும் அதிகமதிகம் கண்ணீர் சிந்தியுள்ளனர். யுத்தத்தின் வேதனையை அனுபவித்துள்ளோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனைவரும் சமாதானத்திற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்.

யுத்தத்தின் நிறைவு என்பது சமாதானத்தை நிலைநாட்டுவதாகும். நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும். நாம் சமாதானத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். நாட்டின் சமாதானத்திற்காகவே படைவீரர்கள் பங்களித்தார்கள். எதிர்காலத்திலும் சமாதானத்திற்காக பங்களிப்பார்கள்.

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்குச் செய்யும் கைங்கரியமாகும். இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.

மண்சரிவு அபாயம் உள்ள 4 ஆயிரத்து 900 வீடுகள் உள்ளன. மழை பெய்யும் போது அதில் எங்கு மண்சரிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. உலகில் எங்காவது மோதல் நடக்கும் போது எமது பொருளாதாரத்திற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் தோன்றும். இத்தகைய நிலையில் இது சுதந்திரமான நாடா? பொருளாதார ரீதியாக வீழ்ந்த நாட்டில் எங்கு இறையாண்மை உள்ளது. பலமான பொருளாதாரமற்ற நாடாக இருக்கின்றோம். உலகில் கௌரமான நாடாக உயர பொருளாதார ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள், தொற்றுநோய்கள் அற்ற நாடு உருவாக வேண்டும். மோதல்களற்ற குரோதமற்ற நாடு உருவாக வேண்டும். அதன் ஊடாகவே பலமான இறையாண்மை ஏற்படும்.

இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கின்றோம். உலகில் சிறந்த நாடாக மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும். படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.” – என்றார்.

Related Posts

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!

by Mathavi
June 16, 2025
0

யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...

சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!

சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!

by Mathavi
June 16, 2025
0

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இரு கடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை...

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர்...

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2025
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக்...

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?

by Mathavi
June 16, 2025
0

கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?

by Mathavi
June 16, 2025
0

யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி...

யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!

யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!

by Mathavi
June 16, 2025
0

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், 35 ஆண்டுகளாக முடங்கிய நிலையிலிருந்தது. தற்போது, இந்த ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லவும், வழிபடவும் இலங்கை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை.!

by Mathavi
June 16, 2025
0

மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்...

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு; மே மாதம் வரை 301 பேர் கைது.!

by Mathavi
June 15, 2025
0

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி