தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு உந்துருளியில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.