நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் முல்லைத்தீவு – முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் விசேடமாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பதிவுகளைத் தாங்கி வந்த நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீட்டு விழாவானது முல்லைத்தீவு, முல்லைக் கல்வி நிலைய நிர்வாகி தேவராசா தேவசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு செய்யப்பட்டது.
அந்தவகையில் நித்தம் மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழின் முதற்பிரதியைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கல்வி நிலைய மாணவர்கள், ஆசிரியர்களிடம் சஞ்சிகையின் ஏனைய பிரதிகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



