கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று (16) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்தில் பெண்ணொருவர ்உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை , சுமித்ராராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்த ஒரு சந்தேகநபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில், காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.