யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த தருண் பிரதீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். நுரையீரலில் கிருமித் தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.