திருகோணமலை அன்புவெளிபுரத்தில் உள்ள ஞானசேகரம் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான வங்கி சேமிப்பு புத்தகமும் பாடசாலைப் பையும் இன்று (16)வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதன் போது இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன்,
ஜப்பான் நாட்டவர் தங்களது வருமானத்தில் 25 வீதத்தை சேமித்து வருகின்றனர். இது போன்று பிள்ளைகளின் பெயரில் சேமிக்க வேண்டும். எனது தந்தையின் பெயரில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சேமித்த பணம் 50 இலட்சத்தை தாண்டியுள்ளது. கல்விதான் சிறந்த மூலதனம் கல்வி என்பது அழியாத செல்வம். பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுடன் கல்வியை பற்றி நாற்பது குறள்களில் வள்ளுவர் கூறியுள்ளார். எனவே எதிர்காலத்திலும் கல்விக்காக என்னாலான முன்னெடுப்புக்களை எடுத்துச் செல்வேன் என்றார்.

