தமிழ் மக்களின் குடியமர்வுக்கான ஆரம்ப வரலாறு அதியமான் கேணியை கடந்து சென்ற குளக்கோட்ட மன்னனும் ஆடக சவுந்தரியும் ஆகும் என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் என மகேந்திரன் மதுலோஜன் என்ற மாணவன் அப் பகுதியில் முதல் பல்கலைக்கழகம் செல்லும் மாணவனை கெளரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (14) மூதூர் – அதியமான் கேணி கிராமத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் ஸ்தாபக தலைவர் கனகசபை தேவகடாட்சம் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
முன்னொருபோது இராஜதானியாக திகழ்ந்த இவ்விடம் வரலாற்றுச் சிதைவினால் பல உயிர்களைக் காவு கொண்டு தற்போது இப் பல்கலைக்கழக மாணவனின் கல்வியால் மேம்பட உள்ளது.
இவைகளுக்கு சமூகம் தன்னால் இயன்ற பங்களிப்புக்களை செய்து மீள் உருவாக்கம் செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.
லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் சதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மூதூர் மத்திய கல்லூரி அதிபர் உட்பட பெற்றோர், நலன் விரும்பிகள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பாராட்டும், உதவித் தொகையும் மாணவனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


