1916
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
1985
தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.
1811
கூட்டுப் படைகள் (எஸ்ப்பானியா, போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1812
ரஷ்யப் படைத் தளபதி மிக்கைல் குத்தூசொவ் புக்கரெஸ்ட் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். ரஷ்ய-துருக்கிப் போர் (1806–12) முடிவுக்கு வந்தது. பசராபியா ரஷ்யப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
1874
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மில் ஆறு பெருக்கெடுத்தில் நான்கு கிராமங்கள் அழிந்தன. 139 பேர் உயிரிழந்தனர்.
1888
நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1891
ஜேர்மனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.
1916
பிரித்தானியாவும் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசுப் பகுதிகளான ஈராக்கு மற்றும் சிரியாவைப் இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.
1920
உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1929
ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1932
பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1943
பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1960
கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966
சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.
1969
சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.
1974
சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975
பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975
ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1991
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
1992
எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
1997
சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.
2003
மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2004
30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2005
குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.
2006
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006
நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.



