மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தரான காவாலி அமலதாஸ் (தகட்டு இலக்கம் – 88118) 2,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த காவாலியே இவ்வாறு காவாலித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரான காவாலி இவ்வாறு பலரிடம் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கு இலஞ்சம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வீடுகளில் ஏதாவது கொண்டாட்டங்கள் நடைபெறும் போது அங்கு ஒலிபெருக்கியில் பாடல் இசைக்கப்படும் போது அங்கு சென்று தொடர்ந்து பாடல் ஒலிக்க அனுமதிக்க வேண்டுமானால் காசு தரவேண்டும் என கூறி இலஞ்சம் பெற்றுச் செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.
இவனுடன் செல்கின்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மக்களுடன் பண்பாக நடந்தாலும் இவன் அதையும் மீறி மக்களை கேவலமாக நடத்துகிறான். இவனது செயற்பாடுகளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்துவேன் என ஒரு பெண் அவனுக்கு நேரிலேயே கூறியவேளை அந்த பெண்ணை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் உடலுறவு செய்யுமாறு கூறியுள்ளான்.
மேலும் குறித்த காவாலி, பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பகுதிக்கு விசாரணைகளுக்காக சென்ற நிலையில், பெண் ஒருவருடன் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றவேளை அங்கிருந்த ஆண் ஒருவரால் தாக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலஞ்சம் கொடுக்காதவர்களை மிரட்டுதல், அவர்களை கைது செய்து இரண்டு வருடங்கள் சிறையில் அடைப்பேன் என தான் நீதிபதி போல இந்த காவாலி ஈடுபட்டு வருகின்றான்.
இவனது காவாலி செயற்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியவராத நிலையில் இவனின் ஆட்டம் அதிகரித்துள்ளது. இந்தச் செய்தியின் பின்னராவது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இவன் தொடர்பில் அடுத்த கட்டம் விரிவான செய்தி, குறித்த காவாலி பொலிஸின் படத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்படும்.