பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பாக பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, தெலிக்கடை பொலிஸ் பிரிவின் கினிமெல்லகஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளை வாளால் தாக்க முயன்ற போது, அங்கிருந்த ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் 30 வயதுடையவர் என்றும் அவரது நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.