கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு ஒழுங்கமைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (15) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில் காலை 9.00 மணியளவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நினைவு நிகழ்வாக மட்டுமல்லாது, நீதி தேடும் ஒரு சமூக அழைப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது. போர் முடிந்த பின்னரும் நீதி வழங்கப்படாதது குறித்த கேள்விகளை உயிருடன் வைத்திருக்க, இவ்வாறு மக்கள் ஒருங்கிணைந்து நினைவு நிகழ்வை அனுஷ்டிப்பது முக்கியமான நகர்வாகும்.


