ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ், 26 சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் இன்று (15) நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் ஜனாதிபதியும் தங்கள் பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (01) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கிய 26 வாகனங்கள் இங்கு ஏலம் விடப்பட்டன.
அவற்றில் 17 வாகனங்கள் இன்று விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்க செலவீனங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களின் விற்பனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வாகனங்களை வாங்க சுமார் 108 தொழிலதிபர்கள் இணைந்துள்ளனர், இதன் விளைவாக வாகனங்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று நடைபெற்ற ஏலத்தில் வாகன விற்பனை மூலம் 200 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.