திருகோணமலை – புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவன் இந்தப் பாடசாலையில் சாதாரண தரத்தில் கற்கும் இன்னுமொரு மாணவனைத் தாக்கிக் கூரிய ஆயுதத்தால் (பிளேட்டால்) கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (15) இடம் பெற்றுள்ளது.
இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் பிரச்சினையில் நடந்ததென ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் சமீம் அஸ்ரி (16வயது) எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.