தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் நேற்று புதன்கிழமை (14) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
இறந்தவர் வயலில் நெல் விதைக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.