1985
குமுதினிப் படகுப் படு கொலை: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1996
ஈழப்போர்: இலங்கைப் படைத்துறை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
2005
திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
2006
வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1811
பரகுவை எஸ்ப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1848
போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.
1849
இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.
1850
கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படு கொலை செய்யப்பட்டனர்.
1851
நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1891
திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.
1897
கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
1904
ரஷ்ய – ஜப்பானியப் போர்: ஜப்பானின் போர்க் கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.
1911
மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1919
துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
1928
வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1929
ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932
இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து ஜப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.
1934
கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.
1935
மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.
1940
இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் டச்சுப் படைகள் ஜேர்மானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து ஜேர்மனியின் வசம் இருந்தது.
1940
மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.
1941
பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.
1943
ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.
1948
பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
1955
உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957
பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958
சோவியத்தின் இஸ்ப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960
சோவியத்தின் இஸ்ப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963
நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.
1972
1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1974
பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இஸ்ரேலியப் பாடசாலை ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
1976
உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.
1988
ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
1991
எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
2008
கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.
2013
ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.




