மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் கையால் நீங்கள் அடுத்தவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். புண்ணியம் சேரும் நாள் இது. நாலு பேர் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் காரணமாக இருப்பீர்கள். வருமானம் பெருகும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கம் வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் அகல கால் வைக்க வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். சமுதாயத்தில் நீங்களும் ஒரு அந்தஸ்தை பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் மனக்கவலைகள் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும். நேரத்தை வீணடிக்கக் கூடாது. கைபேசியை அதிக நேரம் பார்க்கக் கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் வந்து சேரும். வேலையில் பாராட்டுகள் கிடைக்கும். மேல் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தவறாக புரிந்து கொண்ட உறவுகள் கூட உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்வார்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பிறக்கும். யாராலும் செய்ய முடியாத வேலையை கூட சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணமாக திகழ்வீர்கள். சோம்பேறித்தனம் இன்று உங்களுக்கு ஒரு துளிகூட இருக்காது. வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய சொந்த விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் எப்போதும் போல செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. புது முடிவுகள் எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். பொறுமையை இழந்தால் இன்று பல நல்ல விஷயங்களை இழக்கக்கூடும். காலையில் எழுந்தவுடன் குல தெய்வத்தை ஒரு முறை கும்பிட்டு விடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். மனது மகிழ்ச்சியோடு இருக்கும். உங்களுடைய வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறப்பாக செயல்படுவீர்கள். புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பார்ட்னரோடு வாடிக்கையாளரோடு எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. மனைவியின் மீது நம்பிக்கையை இழக்கக்கூடாது. உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்தங்கிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்திலும் எந்த சுறுசுறுப்பும் இருக்காது. கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று யோசிப்பீர்கள். எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிடுங்கள். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு அளவு இருக்காது. மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று, வேலையில் உயர் பதவியை பிடிப்பதற்கு கூட இன்று வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை இன்று ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் மீது நிறைய கண் திருஷ்டி விழும் பாத்துக்கோங்க.