நானுஓயா பகுதியில் டீசல் ஏற்றிச்சென்ற பவுசர் விபத்து நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் (பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும், உதவியாளரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரே கிளரண்டன் பகுதியில் வீதியில். குடைசாய்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் குறித்த கொள்கலன் பவுசர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன . இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT