• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழின அழிப்பு நினைவுத்தூபி; கனேடியத் தூதுவரை நேரில் அழைத்து இலங்கை அரசு கடும் ஆட்சேபனை.!

Mathavi by Mathavi
May 14, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தமிழின அழிப்பு நினைவுத்தூபி; கனேடியத் தூதுவரை நேரில் அழைத்து இலங்கை அரசு கடும் ஆட்சேபனை.!
Share on FacebookShare on Twitter

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கனடாத் தூதுவரை இன்று அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

ADVERTISEMENT

“ஆதாரமற்ற இனப் படுகொலை குற்றச்சாட்டுகள், அது தொடர்பில் நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன்.

இலங்கையின் பன்முகத் தன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, இனப் படு கொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவுக்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகின்றது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப் படு கொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப் படு கொலையைக் குறிக்கும் முகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்தச் செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகின்றது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையும் என்று இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப் படு கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்த முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.” – என்றுள்ளது.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி