அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் யுத்தில் இறுதி கட்டத்தில் அவர் உணவின்றி தவித்த கட்டத்தில் ஒரு பிடி அரிசி இட்டு தண்ணீர் சேர்ந்து உப்பின்றி கஞ்சியை உணவாக்கிய காலத்தினை நினைவுகூரும் வகையில் நேற்றைய தினம் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரது சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு பற்றி காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த யுத்த காலத்தில் எமது தமிழ் உறவுகள் கடந்து வந்த உணவின்றி தவித்த நேரத்தில் அவர்கள் உப்பில்லா கஞ்சியினை உணவாக்கி கொண்டனர். தமிழர்களின் கடந்து வந்த வலிகள் சுமர்ந்த வரலாற்றினையும் நமது தற்போதைய இளம் சமூகத்தினர் மறந்துவிட்டவர்களாகவும் அறியாதவர்களாவும் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாகவும் என அவர் தெரிவித்தார்.




