• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு.!

Mathavi by Mathavi
May 10, 2025
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு.!
Share on FacebookShare on Twitter

தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியில் ஏற்றுமதிக்காக (Cavendish) கேவண்டிஷ் வாழைச்செய்கைக்காக அரை ஏக்கர் வீதம் இலவச குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டமானது இளைஞர் மற்றும் யுவதிகளை விவசாயத்தினை நோக்கி ஈர்ப்பதற்காகவும், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்திற்காகவும், வறுமையினை ஒழிப்பதற்காகவும், மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள விவசாயக் காணிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் யுவதிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எந்தவொரு கிராம அலுவலர் காரியாலயத்திலும் விண்ணப்ப படிவத்தினை 14.05.2025 தொடக்கம் 28.05.2025 வரை உள்ள வேலை நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்திற்கு ஏற்படும் செலவில் 25% இனை பயனாளிகள் செலுத்தும் இயலுமையை கொண்டிருக்க வேண்டும். பின்வரும் மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வதிவிடத்திற்கான புள்ளிகள் (தேராவில் கிராமம் உடையார்கட்டு கிராமங்கள், அருகே உள்ள கிராமங்களில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில், மாவட்டத்தில் மற்றும் மாகாணத்தில்). பயிர்செய்யும் தன்மை, சமூக நிலை (பெண் தலைமைத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்). மற்றும் வயதெல்லை என்பவற்றின் அடிப்படையில் தேர்வுகள் இடம்பெறும். விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் தீர்மானம் மற்றும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் என்பன அனுப்பிவைக்கப்படும்.

பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பயனாளிகள் எனும் அடிப்படையில் நான்கு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். மேலும் வாழைத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கப்படும் விவசாயிகள் கம்பனியில் அங்கத்தவராக சேர்க்கப்படுவார்கள். அத்துடன் பயனாளிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கேவண்டிஷ் வாழை உற்பத்தியினை ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதிக்காக கைச்சாத்திடும் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் விண்ணப்பதாரி வதியும் கிராம ICUL கள உத்தியோகத்தர்களின் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும் அல்லது திருத்தங்களுடன் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவ் விண்ணப்பங்களை 28.05.2025ஆம் திகதி பிற்பகல் 3 மணி அல்லது அதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளையில் நேரடியாக கையளிக்க வேண்டும் அல்லது பதிவுத்தபாலில் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எக்காலத்திலும் குறித்த காணிகள் பயனாளிகளுக்கு சொந்தமாகாது என்பதுடன் எதிர்காலத்தில் தேவையேற்படின் குத்தகை காலத்தினை நீடிப்பது தொடர்பான தீரமானங்கள் எடுக்கப்படும். ஒப்பந்த சரத்துகள் மீறப்படின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு ஏனைய பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேச செயலாளர்.
பிரதேச செயலகம்,
புதுக்குடியிருப்பு.

Related Posts

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

by selvan
June 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

by selvan
June 15, 2026
0

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

by selvan
June 15, 2026
0

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த...

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

by Mathavi
June 15, 2026
0

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

by Mathavi
June 15, 2026
0

எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

by Mathavi
June 15, 2026
0

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

மரை இறைச்சியுடன் இருவர் கைது.!

by Mathavi
June 15, 2026
0

பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர். பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை...

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

by Mathavi
June 15, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய...

கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

தம்பதியினர் மர்மமாக உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 15, 2026
0

களுத்துறை - புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் மேல் மாடியில் வசித்து வந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த...

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்.!

by Mathavi
June 15, 2026
0

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15.06.2026) வடக்கு மாகாண...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி