தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் அபிவிருத்தி ஒழுங்காக நடைபெறவில்லை இதனால்தான் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் 159 ஆசனங்களை வழங்கினர். கிளிநொச்சி யாழ் மக்கள் மூன்று ஆசனங்களை வழங்கியுள்ளனர்.
இந்த வருடம் வரவு செலவுத் திட்டம் மூலம் பல்வேறு அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
கடந்த ஆட்சியில் படம் காட்டுவதற்காக சமூக வலைத்தளங்களில் அபிவிருத்தி செய்வதாக காட்டினர்.
எனி வரும் காலங்களில் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்றம் எங்களிடம் உள்ளது பிரதேச சபைகளும் எமது கைகளுக்கு வரவேண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் பின்பு எப்படி அபிவிருத்தி நடக்கிறது. என்று பாருங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் தோற்றவர்கள் தற்போது எமது கட்சி இனவாத மதவாத கட்சி என்று குறிப்பிடுகின்றனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கேட்கின்றார்கள் தாங்கள் நிம்மதியாக வாழவேண்டும். எமது அரசாங்கத்தில் அது ஏற்படுத்தி கொடுக்கப்படும்.


