வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்த போது தவறுதலாக மின்சாரம் தாக்கியதில் இவ் உயிரிழப்பு இடம்பெற்றது.
ADVERTISEMENT
சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த ஆ.ஆழிவேல் வயது 50 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.