தேசியமக்கள் சக்தியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று திறக்கப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான பிரச்சாரபணிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட குடியிருப்புவட்டாரத்தில் தேசியமக்கள் சக்தி சார்பாக கனகரத்தினம் கிருஸ்னதாஸ் நேரடிவேட்பாளராக போட்டியிடுவதுடன், க.மோகன் பட்டியல்வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவர்களது பிரதேசதேர்தல் அலுவலகம் பூந்தோட்டம் சந்தியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.இதன்போது தேசியமக்கள் சக்தியின் இணைப்பாளர் சமத் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை வைரவபுளியங்குளம்,கற்குளி பகுதிகளிலும் தேசியமக்கள் சக்தி பிராந்தியகாரியாலங்களை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்தக்கது.