திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இருக்கும் அனைத்து வேட்பாளர்களுடனான சந்திப்பு இன்று (04) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய ஒரு தெளிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலானது கட்சியின் தவிசாளரும் முன்னால் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன, பொது செயலாளரும் முன்னால் அமைச்சருமான தலதா அத்துக்கொரல, பிரதி தலைவரும் மற்றும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
இம்முறை நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வட்டாரமாக இருந்தாலும் உங்கள் வாக்கினை யானை சின்னத்துக்கு அளியுங்கள் என அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.




