வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் இந்நிகழ்வு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டனர்.
ADVERTISEMENT
இதில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



