பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல நாட்களாக லைமறைவாக இருந்து வந்த தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை கோரி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை 17 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து, தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.