நேற்றிரவு யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் ஒரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இருப்பினும் இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
ADVERTISEMENT
கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியது. நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என அறியமுடிகிறது.




