கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கடந்த 08.03.2025 சர்வதேச மகளிர் தினத்தன்று நான்கு பெண்கள் கிராம சேவையாளரிடம் சென்று தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக உறுதி செய்து தருமாறு கேட்ட பொழுது உரிய சரியான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என கிராம சேவையாளர் கூறியதை எடுத்து கிராம சேவையாளரை கண்டபடி தாறுமாறாக தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்ததுடன் கிராம சேவையாளர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து கிராம சேவையாளர் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை 09.03.2025 2025 அன்றைய தினம் கைது செய்து நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட பொழுது இரண்டு சந்தேக நபர்களிள் ஒருவர் விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.