• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் முழு நேர கதவடைப்பு.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
March 11, 2025
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் முழு நேர கதவடைப்பு.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி சேவை சந்தையினர் இன்றைய தினம் 11.03.2025 சில கோரிக்கைகளை முன்வைத்து முழு நேர கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  1. நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டி வழங்குவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படவில்லை. தற்போது உலக வங்கியின் அனுசரணையில் 40 மில்லியன் ரூபாய் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.
  2. 04.06.2024 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் வர்த்தகர் அபிவிருத்திச் சங்க மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட தற்காலிக கடைகளை A9 வீதியையும், கனகபுர வீதியையும் பார்க்கக் கூடியவாறு வழங்குதல் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. ஏற்கெனவே அரச திணைக்களத்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் கிளி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு கட்டடங்களைக் கட்டி வாழ்வாதார கடைகளாக வழங்குவதாகவே உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தில் வர்த்தகர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
  4. பொதுவாக கிளிநொச்சி சேவைச்சந்தையின் பிரதான மரக்கறி வாணிபம், மீன் வாணிபம், புலால் வாணிபம், பழ வாணிபம் போன்றவற்றுக்கு இடையூறாக சேவைச்சந்தையினை அண்மித்த பகுதிகளில் மேற்படி வியாபாரங்களை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபை அனுமதித்துள்ளமையால் சேவைச்சந்தை வர்த்தகர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.
  5. அம்பாள் குளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் மொத்த வியாபாரம் எனப் பெயரிடப்பட்டு தற்போது அங்கு காலை 5.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருதலும் அங்கு வரிநடைமுறை பின்பற்றப்படாமையால் சேவைச்சந்தைக்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் வருகை தரும் வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
  6. கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி, வெற்றிலை, மீன், பழ வாணிபம் அனைத்து வாணிபங்களுக்கும் 4% சதவீத வரி அறவீட்டால் உற்பத்தியாளர்களின் வருகையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பும் குறைந்துள்ளது.
  7. கிளிநொச்சி சேவைச்சந்தையை அண்மித்த பகுதியில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்களால் சேவைச்சந்தை முற்றுமுழுதாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  8. கரைச்சி பிரதேச சபையால் நிரந்தர கட்டடங்களுக்கான முறையற்ற திட்டமிட்ட இடவாடகை அதிகரிப்பும் சேவைச்சந்தை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
  9. சேவைச்சந்தையின் வர்த்தகர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வர்த்தகர்கள் இன்றைய தினம் முழு நேர கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது...

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

by Mathavi
June 16, 2026
0

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி