• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள், அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்.!

Mathavi by Mathavi
March 11, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள், அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

தமிழர்களுக்கு எதிரான இனப் படு கொ லை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (11.03.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவோடு ஆல்ஜசீரா ஊடகவியலாளர் நடாத்திய நேர்காணலைத் தொடர்ந்து தெற்கில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு விழுந்துள்ளது. படலந்த வதை முகாமை மையமாக வைத்து அதற்கு காரணமான பிரதான சூத்திரதாரியான ரணிலின் “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறிக்க வேண்டும்” எனும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறுவதில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது? ஒரு குற்றவாளி இன்னும் ஒரு குற்றவாளியை விசாரிக்க முடியுமா? அவ்வாறு விசாரித்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.

தெற்கில் ரணிலிற்கு எதிரான மனநிலை பட்டலந்த வதைமுகாமை பற்றியதாகவே மட்டும் இருப்பதும் உருவாகி இனவாத தன்மையை வெளிப்படுத்துகின்றது. யுத்த காலப்பகுதி தொடர்பிலும் யுத்த இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை தொடர்பு கொள்ளும் அப்பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கும் பதில் அளிக்க ரணில் தடுமாறியதே நாம் அறிவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கரிசனையோ அக்கறையோ இல்லாத மனநிலையையும் படலந்த குற்றங்களை முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் எனக்கோருவது பக்க சார்பானதும் இனி வாத மனநிலையை கொண்டதுமாகும்.

அல்ஜசீரா ஊடகவியலாளர் தெற்கிலும் வடக்கிலும் நிகழ்த்தப்பட்ட வதைகள், கொடூர கொடூரங்கள் யுத்தக் காலப்பகுதி தொடர்பிலும் குற்றங்கள் கேள்விக்கணைகள் தொடுகின்ற போது தெற்கு சார்ந்து மட்டும் சிந்திப்பதும் தமிழர் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் தொடரில் கருத்துக்கள் வெளியிடாது இருப்பது இரண்டு நாடுகள் என்பதையே காட்டி நிற்கின்றது. இரண்டு நாடுகள் என்றாலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும். தற்போதும் அதனை காண முடியாமல் இருப்பது இனவாத அவல நிலையையே மீண்டும் உணர்த்துகின்றது.

பட்டர் அந்த முகாமோடு தொடர்புபட்டவர்கள் அதற்கு துணை நின்ற பாதுகாப்பு தரப்பினரும் நீதி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்று கருத்து இல்லை காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும். உண்மை முழு நாட்டுக்கும் தெரிய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 1988/ 89 காலப்பகுதியில் மாத்தலை பிரதேசத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய போது அங்கு கொண்டு புதைக்கப்பட்டவர்களின் சமூக புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கில் மேலும் பல சமூக புதைகுழிகள் தொடர்பான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போதும் அது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியான மக்கள் முன்னணி வாய் திறக்காமல் அமைதி காத்து தற்போது ரணில் மீது விசாரணை எனக் கூறுவது அரசியல் நாடகமாக அமையக்கூடாது.

ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் உதவியோடு 1988/ 89 காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளை தூக்கிக்கொண்டு மஹிந்த ராஜபக்சே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நோக்கி ஓடியதை மறக்க முடியாது. அதே மகிந்த திஸ்ச நாயகத்திற்கு 20 வருட தண்டனையை பெற்றுக் கொடுத்ததும் சர்வதேச தலையீட்டின் காரணமாக அவர் விடுதலை பெற்றுதும் மறக்க முடியாது. படலந்த கொ லைகளை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டார நாயக்கரும் மகிந்த ராஜபக்சவும் அமைதி காத்தமை கொ லைக் குற்றவாளிகளை பாதுகாத்ததாகவே கருதப்பட வேண்டும். அவர்களும் ரணிலுக்கு கொ லை குற்றவாளிகளே,
தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய யுத்தம் அவர்களால் புரியப்பட்ட கொ லைகள் படலந்த விடயத்தை விசாரணைக்கு உட்படுத்தாததை மறைத்து விட்டது. தெற்கு இனவாத யுத்தத்தில் மூழ்கி இருந்தது. இனவாதம் தெற்கின் கண்களை மறைத்து நீதியை புதைத்து விட்டது என்றும் கூறலாம். இவ்வாறு மறைத்தவர்களும் பட்டலந்தை கொலையாளிகளே. அல் ஜாசீரா ஊடகவியலாளர் கேள்விகளை கேட்கவில்லையேல் தற்போதும் நீதிக்கான குரல் எழுத்திருக்காது.

தமிழர்களை பொறுத்தவரையில் ரணிலுக்கு எதிரான விசாரணை எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சந்திரிகாவையும் மகிந்தவையும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பலவந்தமாக தள்ளி தமது முன்னணி உறுப்பினர்களையும் சாதாரண கிராமிய இளைஞர்களையும் இனவாதத்திற்குள் தள்ளி தமிழர்களை இனப் படு கொ லை புரிந்த இவர்களும் தண்டனைக்குரியவர்களே.

தற்போதைய ஆட்சியாளர் ரணிலுக்கு எதிராக விசாரணை நடத்துவதாக கூறுவது போல் தங்கள் மனசாட்சியை தொட்டு தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் மட்டுமே இவர்களின் கிளீன் ஸ்ரீலங்காவிற்கு நீதி கிட்டும் இல்லையேல் அதுவும் போலியே.

தற்போதைய ஆட்சியாளர் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த யுத்தம் தொடர்பாக உள்ளக விசாரணை என்பதும் சர்வதேசத்தின் எந்த தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கும் காரணம் இவர்கள் மீதும் கொ லை குற்றச்சாட்டுகள் விழும் என்பதன் காரணமாகவே. கடந்த ஆட்சியாளர்களை போல பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் நோக்கமேயாகும். சர்வதேச விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும் கொ லை குற்றவாளிகளே.

இலங்கை வரலாற்றில் எல்லா காலப்பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட இன சுத்திகரிப்பு, இனப் படு கொ லை, யுத்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் இதய சுத்தியோடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கான தகுதி இலங்கைக்கு இல்லை என்பதே தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அனுபவமாகும். அதனாலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யுத்த குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

இதுவரை காலமும் பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக அமைதி காத்தவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்கிறார்கள் எனில் அதற்கு அல் ஜஸீரா சர்வதேச ஊடகமே காரணமாகும். அதைப் போன்று தமிழர்களுக்கு எதிரான இன படு கொ லை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள், கொலையாளிகள், இனவாதிகள் என்பதை உண்மை.

Related Posts

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 16, 2026
0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும்...

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

by Mathavi
June 16, 2026
0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல்...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு...

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி