வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச மட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15.03.2025 அன்று ஆரம்பமாகும் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கின் தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
ADVERTISEMENT
கரப்பந்து, எல்லே, மென்பந்து, உதைபந்து, கபடி, மெய்வல்லுனர் போன்ற மேலும் பல போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் இடம்பெறவுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான கடிதம் வடமராட்சி கிழக்கின் அனைத்து கழகங்களுக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
