• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடக்கு கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்!

Bharathy by Bharathy
March 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
வடக்கு கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூலியால் போல் இருக்கிறார்கள்!
Share on FacebookShare on Twitter

வடக்கு – கிழக்கு மாகணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அவர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை இன்று (09.03) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டம் மட்டுமின்றி வடக்கு – கிழக்கில் பெரும்பாலான சபைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த தேர்தல் முறை என்பது சிக்கலான முறை. நாங்கள் வடக்கு மாகாணத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு, பூநகரி ஆகிய பிரதேச சபைகளை மாத்திரே ஒரு கட்சியாக அந்த நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஆட்சி செய்தோம்.

வவுனியாவில் எல்லா சபைகளிலும் பெரும்பான்மையான வட்டாரங்களை கைபபற்றி இருந்தாலும் கூட நாங்கள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டி இருந்தது. அதற்கு இந்த உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணம்.

அதனால் தான் கடந்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனுக்கள் செய்த போது கட்சிக்குள் முடிவெடுத்தோம். தனித் தனிக் கட்சியாக போட்டியிட்டு ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று. ஆனால் அதன் பின் நடந்த முடிவு உங்களுக்கு தெரியும்.

இம்முறை எமக்கு சவாலான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ள ஜனாதிபதியின் கட்சி வடக்கு – கிழக்கில் போட்டியிட வற்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் வடக்கு – கிழக்கில் போட்டியிடவில்லை.

எனவே, எமது வேட்பாளர்களின் செயற்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தும். அரசியல் ரீதியாக கொள்கை, ரீதயாக வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வட்டாரத்திலும் போட்டியிடும் வேட்பாளர் தான் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றார். இதனால் நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

வவுனியா மாவட்டம் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு மாவட்டம். எமது மாவட்டத்தில் இனப் பரம்பலை மாற்றக் கூடிய வகையில் பல பிரச்சனைகள இடம்பெறுகின்றன. எங்களது மக்களது காணிகள் அபகரிக்கப்படுகிறது. பல திணைக்களங்கள் எமது காணிகளை கையகப்படுத்துகிறது. எமது இடம்பெயர்ந்த மக்கள் குடியேற முடியாத நிலை இருகிறது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இருப்பை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம்.

அந்த வகையில் பாராளுமன்றத்திலும் நானும், ரவிகரனும் குரல் கொடுத்து வருகின்றோம். அமைச்சர்களோடு பழகி வருகின்றோம். எமது மக்கள் சார்ந்த செயற்பாடுகளுக்காக அவர்களுடன் சண்டை பிடிக்கவில்லை. தவறுகள கூறுகின்றோம். பல வாக்குறுதிகளை தந்துள்ளார்கள். சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், வடக்கு – கிழக்கு மாகணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அது ஒரு பரிதாபமான விடயம். அவர்களுக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கு இடமில்லை. அவர்கள் அங்கு கூலியால் போல் தான் இருக்கிறார்கள்.

வடக்கு – கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள். அது தான் ஜதார்தம். உண்மை. அண்மையில் கருத்து வெளியிட்ட ஊடகம் ஒன்று தரைப்பட்டியில் வடக்கு கிழக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள் எனக் காட்டியது. எவ்வாறு இருந்தாலும் எமக்கு சவால் மிக்கது இந்த தேர்தல். அதை மனதில் வைத்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related Posts

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது...

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

by Mathavi
June 16, 2026
0

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி