வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணத்தின் ஆரம்ப திருப்பலி இன்று (8)ஆரம்பமானது.
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை தலைமையில் இன்று மாலை 05.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்ப நாள் திருப்பலி ஆரம்பமானது.
தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் இன்று 8/03/2025 தொடக்கம் 20/04/2025 வரை இடம்பெறவுள்ளது.
ஆறுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொள்ளும் இந்த ஆன்மீக எழுச்சிப்பயணத்தில் அவர்கள் எல்லோர் வீடுகளுக்கும் சென்று மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து அவர்களை தரிசிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







