யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு 7:30 மணியளவில் மாணவன் ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
சம்பவத்தில் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் எனும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.