தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்
தேர்தல் செயன்முறையில் பெண்கள், இளையோர் மற்றும் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் ஈடுபாடு மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களின் தாக்கம் பற்றி தேர்தல் பங்குதாரர்களுடனான வவுனியா மாவட்ட மட்ட கலந்துரையாடலானது இடம்பெற்றது.
தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தில் ஏற்பாட்டில் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிருந்தினர் விடுதியில் இந் நிகழ்வு இன்று (07.03) இடம்பெற்றது.
அரசியல் பன்மைத்துவம், தேர்தல் செயன்முறைகளில் பிரஜைகளின் அல்லது குடிமக்களின் ஈடுபாடு மற்றும் தகவல்களின் தாக்கம் தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டது.
மாற்று கொள்கைகளுக்கான நிலையம், சீபிஏ மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், சீஎம்ஈவீ ஆகிய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விபரங்கள், பரிந்துரைகள் என்பனவும் இதன்போது பரிமாறப்பட்டன.
தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர் மற்றும் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் அனோஜன் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திவியா தர்மராசா அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



