முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழிகள் அகழப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அனேகர் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் அந்த புதைகுழி குறித்த விசாரணையின் அடிப்படையில் ஆறு வார காலப்பகுதியில் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனிடையே அங்கு மீட்கப்பட்ட போராளிகளின் எச்சங்களை அடையாளம் காணும் நோக்கில்; நீதிமன்றத்தினால் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட போராளிகளின் அடையாள எச்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தயவு செய்து கீழே உள்ள விபரங்களில் உள்ள தகட்டு இலக்கங்களின் அடிப்படையில் அவர்களை தெரிந்தவர்களோ அல்லது தெரிந்திருக்கக்கூடியவர்களோ பார்க்கும் வகையில் இந்தப் பதிவினை பகிர்ந்து அவர்களை அடையாளம் காண உதவுங்கள்.
நன்றி..
302, 499, 760, 1204,1559, 1781,1907, 2471, 3104, 3174, 3416, 3503, 3504, 6551, 6904, 7907, 10546, 10555, ஆ – 1564, இ – 0043, இ – 225, இ – 458, இ – 474, இ – 701, இ – 1124, இ – 1302, இ.1333, ஈ – 17, உ – 018, உ – 10024, உ – 10177, எ – 306, எ – 599, எ – 1778, ஒ – 3094, ஓ – 3035, ஓ – 3057, X – 95
தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும்:
அ – மட்டு-அம்பாறை மாவட்டத்தை தரிப்பிடமாகக் கொண்ட அத்துணை சண்டை உருவாக்கங்களுக்கும்
ஆ – திருமலை மாவட்டம் மற்றும் அங்கு இயங்கும் படைத்துறை பிரிவுகள். உதாரணத்திற்கு: திலகா படையணி மற்றும் இளங்கோ படையணி
இ – ஆரம்பத்தில் வன்னி மாவட்டம் பின்னர் வடபோர்முனைக் கட்டளைப் பணியகம்
ஈ – மணலாறு மாவட்டம்
உ – யாழ். மாவட்டம் (1995 வரை)
ஊ – மன்னார் / திரைப்பட மொழியாக்கப் பிரிவு
எ – மாலதி படையணி
ஐ – புலனாய்வுத்துறை
ஒ – கடற்புலிகள்
ஓ – படைத்துறைப் பள்ளி
ஃ – படையப் புலனாய்வுப் பிரிவு
க – ஆரம்பத்தில் சாள்ஸ் அன்ரனி, 2002 முதல் இம்ரான் பாண்டியன் படையணி
ச – படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி7
கா – ஆரம்பத்தில் சிறுத்தைப்படை (2006 இன் பின்னர் மகளிருக்கு மட்டும் கொ)
தி – சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
நா – கிட்டு பீரங்கிப் படையணி
ம – படைய அறிவியல் கல்லூரி
வ – விசேட வேவுப் பிரிவு
வா – போர்க் கருவித் தொழிலகம்
வி – கணனிப் பிரிவு
ஞ – வான்புலிகள்
ஞா – சோதியா படையணி
ஞி – குட்டிசிறி மோட்டார் படையணி
யா – பூநகரிப் படையணி
0 – 5000 – ராதா வான்காப்புப் படையணி (2002 முதல்)
0 – 5000 – 6000 – தலைமைச் செயலகம்
0 – 6000 – 9000 – அரசியல்துறை மகனார் (2007 இறுதிவரை மருத்துவப்பிரிவும் அடங்கும்)
0 – 9000 – 10000 – அரசியல்துறை மகளிர்
0 – 15000 – 18000 – பொன்னம்மான் கண்ணி வெடிப்பிரிவு
0 – 18000 இற்கு மேல் மருத்துவப் பிரிவு (2007 இறுதியிலிருந்து)
து – துணைப் படை
கா. து காவல்துறை
எ.ப – எல்லைப் படை
சி.எ.ப – சிறப்பு எல்லைப் படை
த – நிதித்துறை 0-4999 ஆண்கள், 5000 இற்கு மேல் மகளிர்
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.