வடமராட்சி கிழக்கு யா/தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நேற்று (4) இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் திரு.பேரின்பநாதன் ஜெயகாந்தன் தலைமையில் பிற்பகல் 1.30 மணியளவில் பொது மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது.
மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள், பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.பிரான்சிஸ் கெனியூட்(உதவிப்பிரதேச செயலர், பிரதேச செயலகம்,கெப்பிட்டிக்கொல்லாவை) சிறப்பு விருந்தினராக
திருமதி.சித்திரகலா வித்தியாபதி (ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம், வடமராட்சி)
கெளரவ விருந்தினராக அருட்பணி ஜஸ்ரின் ஆதர்
(பங்குத்தந்தை புனித அந்தோனியார் தேவாலயம் தாளையடி) ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பொதுமக்கள், பழைய மாணவர்கள் என பலரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






