இ.போ.ச பஸ் சாரதிகள் தொடர்பில் முறையிட 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் பருவச்சீட்டு உடையவர்களுக்காக பஸ்ஸை நிறுத்தாமல் செல்லும் சாரதிகள் தொடர்பில் முறையிட இந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்த முடியும்.
ADVERTISEMENT
இந்த தொலைபேசி இலக்கமானது பொதுமக்களுக்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.