வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது. பால் அருந்த போகின்றோம் என்று சொல்வது இனவிடுதலைக்கான அரசியல் அல்ல நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல இன விடுதலைக்கான அரசியல் பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் இவ்வாறான சூழல் இருக்கும் போது நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.