நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நவீன வசதிகளுடன் கூடிய உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார்.
இதில் மாவட்ட அரசாங்கதிபர் கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
கடந்த அரசாங்கம் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது. நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன் இப்பிரதேசத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என தெரிவித்தார்.