சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி போலியான அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவரை திங்கட்கிழமை காலை(3) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிரேஸ்ட குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. எம். இக்பால் தெரிவித்தார்.
ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9 மாடுகளை சிறிய வாகனம் ஒன்றில் அடைத்து வைத்த நிலையில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகனத்திலிருந்து 9 மாடுகள் உடல் பலவீனமான முறையில் மீட்கப்பட்டுள்ளன. சில மாடுகளில் காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


